🪔
🪔
Arulmighu Sri Annapoornai Siddhar Thiruvadigal
🌺 ஆதிஷ்டானம் – செங்கப்படை, திருமங்கலம், மதுரை மாவட்டம் 🌺
"வருக... தரிசிக்க... அருள் பெறுக..."
மதுரை மாவட்டம் செங்கப்படை கிராமத்தில் ஜீவசமாதி அடைந்து அருள்செய்யும் ஸ்ரீ அன்னபூரணி சித்தர் ஐயாவின் இயற்பெயர் பழனிச்சாமி என்பது செவிவழிச்செய்தி, பூர்வீகம் தெரியவில்லை.
ஐயா அவர்கள் 1963ம் ஆண்டு வரை காரியாபட்டி அருகில் மாந்தோப்பு கிராமத்தில் ஜீவசமாதி கொண்டுள்ள ஒரு சித்தர் கோயிலில் இருந்து தொண்டு செய்து வந்துள்ளார். அங்கிருந்து செங்கப்படை கிராமத்திற்கு வந்து இங்குள்ள சாவடியில் தங்கி காலை மாலை வேலைகளில் ஒரு மணி நேரம் சூரிய தியானம் செய்து நம் பகுதி மக்களுக்கு விபூதி கொடுத்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்து வந்தார்.
தினமும் ஏழுவீடுகளுக்கு மட்டும் சென்று "அன்னபூரணி" என்று அழைப்பார். மேலும் கிடைத்ததை உண்டு மகிழ்ந்து வடலூர் வள்ளலார் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை ஜெபித்து வருவார். இதனால் ஐயாவை எல்லோரும் "அன்னபூரணி தாத்தா" என்று அழைத்தார்கள்.
ஐயா அவர்கள் தான் ஜீவசமாதி அடைவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே தான் முக்தி அடையும் தேதி நேரத்தை அறிவித்துவிட்டார். அவர் சொன்னப்படி 1973ஆம் ஆண்டு ஆனி மாதம் 28ம் நாள் வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு வளர்பிறை பிரதோஷம் அன்று கேட்டை நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். அவர் சொன்னப்படி நம் ஊர் ஆற்றங்கரையில் நம் ஊரைப்பார்த்து தெற்கு நோக்கி அமர்த்தப்பட்டு அவருக்கு அந்த இடத்தில் சிறுபீடம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்துவந்தனர்.
அதன்பின் ஆனி மாதம் 24ம் தேதி (08.07.2025) கேட்டை நட்சத்திரத்தன்று தற்போது உள்ள அதிர்ஸ்டான ஆலயம் எழுப்பி கோபுர குடமுழுக்கு, குருபூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தன்று சித்தர் ஐயாவின் லிங்க திருமேனிக்கு அபிஷேகமும் மற்றும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இன்றும் இந்த அற்புத ஸ்தலத்தில் அமர்ந்து நாடிவரும் அனைவருக்கும் நலமும், வளமும் வழங்கி வருகின்றார்.
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இறைநம்பிக்கை, மன அமைதி மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலை வழங்கும் அருள் நிலையமாக இந்த திருத்தலம் திகழ்கிறது.
சித்தர் ஜீவசமாதியை தினமும் தரிசிக்கலாம். சித்தர் அருளை வேண்டுபவர்கள் நேரில் வந்து உணர்ந்து செல்லலாம்.
சித்தர் ஐயாவின் அருள் பெற்று தீராத மன நோய்களுக்கும் தீராத உடல் நோய்களுக்கும் இந்த ஆலயம் ஒரு சிறந்த அருள் வழங்கும் ஆலயமாக உள்ளது.
அமைதியான சூழலில் மன அமைதியை கண்டறியும் தியான இடமாக உள்ளது.
அபிஷேகம், ஹோமம், ஆரத்தி — மாலை நேர தரிசனம்.
எல்லா பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கேட்டை நட்சத்திரம், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி மேலும் எல்லா குருவார தினத்திலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த குருபூஜை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் அருளாசி பெற்று வருகின்றனர்.
சித்தர் அருளாசி பெற
மன அமைதி பெற — நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் நோய்களிலிருந்து விடுபட
குடும்ப நலன் வேண்ட
தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் வேண்ட
ஆன்மீக முன்னேற்றம் அடைய
இறை அருள் மற்றும் நம்பிக்கை பெற
"சித்தர் அருளால் எங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது. இந்த திருத்தலம் உண்மையிலேயே அருள் நிறைந்த இடம்."
"குருபூஜையில் கலந்து கொண்ட பிறகு மனதிற்கு புதிய நம்பிக்கை கிடைத்தது. வாழ்க்கையில் நேர்மறை மாற்றம் தெரிகிறது."
"இந்த திருத்தலத்தின் அமைதியான சூழல் ஆன்மீக சக்தியை உணர வைத்தது. தினமும் வர மனது வருகிறது."
திருத்தலம் தினமும் திறந்திருக்கும்.
* நேரம் சிறப்பு நிகழ்ச்சிகளில் மாற்றலாம்
🌺
🍚 ஒவ்வொரு நாளும் வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம்
உங்கள் அன்பு உபயத்தால் இந்த புண்ணிய காரியம் தொடர்கிறது.
மனித சேவையே மகேசன் சேவை 🙏
📞 தொடர்பிற்கு: 70141 89056